செவ்வாய், 12 ஏப்ரல், 2011

இப்படியும் சில அப்பழுக்கற்ற அரசியல்வாதிகள்!

பத்தாண்டு காலமாக முதலமைச்சராக இருந்து மூன்றாவது முறை வெற்றியை இழந்த நிருபேந்திர சக்கரவர்த்தி, தனது அலுவலகத்தைக் காலிசெய்துவிட்டு ஒரு கையில் புத்தகப் பையும் இன்னொரு கையில் தனது
 துணிமணிகளையும் சுமந்து சென்றபோது பத்திரிக்கையாளர் எங்கு செல்கிறீர்கள் என்று கேட்டபோது நான் கட்சி அலுவலகத்திற்கு செல்கிறேன் என்று சொன்னார்.தினமணியில்
தலையங்கமாக'அதிசயம் ஆனால் உண்மை' என்று எழுதினார்கள்.இவர் மார்க்கிஸிஸ்ட் கட்சியின் உண்மைத் தொண்டர்.'தமிழகத்தில் 2011 ஆண்டில் சட்டமன்ற விடுதியை காலிசெய்யும்போது நன்மாறனின் அறை ஆள் அரவமற்று அமைதியாய் நிற்கிறது.உள்ளே ஒரு ஒல்லியான உருவம் ஓடியாடி ஏதோ அவசரத்தில் தன் உடைமைகளைஒரு பையில் எடுத்து அழுத்தி கொண்டிருந்தது.கூர்ந்து பார்த்தால் நன்மாறன் எம் எல் ஏ. எம்எல்ஏவுக்கு 50ஆயிரம் சம்பளம் தருகிறது அரசாங்கம். அதை கட்சிக்கு கொடுத்துவிட்டு கட்சி 5500 ரூ சம்பளம் தருகிறது.அதுதான் குடும்ப ஜீவனத்துக்கு ஆதாரம்'என்று சொல்லிவிட்டு சிரிக்கிறார்.இவருக்கு
 இரண்டு மகன்கள். ஒரு பையன் எம் எஸ் சி படித்துவிட்டு வேலை பார்க்கிறார்.இன்னொருவர் பி ஏ பட்டதாரி.மனைவி சண்முகவள்ளி உறவினர் வீட்டு பெண். 'பாட்டி காலத்துல இருந்து ஒரு வீட்ல குடி இருந்தோம். அந்த வீட்ட வாங்கிக்க சொல்லி வீட்டு உரிமையாளர் கேட்டுகிட்டார்.பத்து வருடத்துக்கு முன்னாடி வாங்கினது. இதுதாங்க நம்ம சொத்து' என்கிறார்.நன்மாறனின் எளிமை ஊர் அறிந்த விஷயம். தன்னுடைய மகனின் கல்லூரி சேர்ப்புக்காக சென்ற போது கல்லூரி கேட்ட சின்ன தொகையை தயார் செய்து கொண்டு போவதற்குள் அட்மிஷன் முடிந்து விட்டது.சிபாரிசு எதுவும் போகாமல் வேறு கல்லூரியிலே தன் மகனைச் சேர்த்து விட்டார். யாரும் தன்னை குறை சொல்லி விடக்கூடாது என்று அச்சப்படும் தன்மாறன் இந்த நன்மாறன். இவரைப்போலவே மிக சிம்பிள் திருவட்டார் எம் எல்ஏ லீமாரோஸ். அவரைத் தேடிச் சென்றபோது ஒரு டீக்கடையில் தனியாக நின்று டீ குடித்துக் கொண்டிருந்தார். யாரும் அவருடன் இல்லை. தனி மனைஷி. எங்க போனாலும் பஸ்தாங்க பலமுறை எம் எல் ஏன்னு நடத்துனர்கிட்ட சொன்னாக் கூட நம்ப மறுக்கிறாங்க. சாதாரண குடும்பத்துல இருந்து வந்தவள் நான். ஊர்ல என் அம்மாவும்,அப்பாவும் கூலி வேலைக்குப் போறாங்க.இந்த மக்கள் என்னை மாதிரியான ஒரு ஏழ்மையான பின்னணியில் இருந்து வந்தவளை ஏற்றுக் கொண்டாங்க இல்லையா? அவங்களுக்குத்தான் நான் நன்றி சொல்லணும்' என்று சொல்லும் லீமாரோஸ் பணபலம் இல்லாமல் வெற்றி பெற்ற எம்எல்ஏ.'உங்களுக்கு என்று உள்ள சொத்து என்ன?' என்றால், பெரியதாக சிரித்தவர் 'ஒன்றுமில்லை 2002ல் இருந்து மூன்று மாசத்துக்கு ஒருமுறை359 ரூ பிரிமியம் கட்டுற மாதிரி ஒரு எல் ஐ சி பாலிசி போட்டேன். அதான் என் சொத்து' என்று நம்மை பதற்றப்பட வைக்கிறார்.
கட்சி இவருக்கு சம்பளமாக கொடுப்பது மாதம் 4000 மட்டுமே. சட்டமன்றக் கூட்டத் தொடருக்கு வரும் போது கூட ரயிலில் இரண்டாம் வகுப்பிலதான் வருகிறேன்..ஏ சி கோச்ல வரலாமே என்று ரயில் பரிசோதனை அதிகாரிகள் கேட்கிறார்கள்.எந்த கிளாஸ்ல வந்தா என்ன சார்?எல்லா ரயிலும் சென்னைக்குதானே வருகிறது' என்று சொல்லும் லீமாரோஸ்',(1) இவர் இப்படியென்றால் 'திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கே.பாலபாரதி 10 ஆண்டுகளாக எம் எல் ஏ வாக இருந்தவரின் சொத்து பத்து கிராம் நகையும் அஞ்சலக சேமிப்பு மூலமாக ரூ 1 லட்சம் மட்டுமே'.(2) நன்மாறன் மாதிரியான எம் எல ஏக்கள் முதலமைச்சராக இருந்த  காமராசர், மந்திரியாக இருந்த கக்கன், திரிபுரா முதல்வர் நிருபன் சக்கரவர்த்தி,ஜீவா வரிசையில் இப்படியும் எளிமையான அரசியல்வாதிகள் இருப்பது மார்க்ஸிய சித்தாந்தத்துக்கு இன்னும் உயிர்கொடுக்கிறார்கள் என்று ஆறுதலடையலாம்.சில ஓடுகாலிகளும் உதவாக்கறைகளும் அவ்வப்போது கரும்புள்ளிகள் அவர்கள் வரலாற்றின் குப்பைத் தொட்டியில் வீசியெறியப்பட்டவர்கள்.இவர்கள் வரலாற்றில் தடம் பதிப்பவர்கள் இப்பொழுதெல்லாம் எளிமையான அரசியல்வாதிகள் யாரிருக்கிறார்கள்?என்று ஆதங்கப்படுவோர்க்கு இவர்களை தாராளமாக குறிப்பிடலாம்.
.
 ஆதாரம்;(1) ஏப்ரல் 2011 விடியலை நோக்கி,(2) மாதவராஜின் தீராத பக்கங்கள்.

திங்கள், 29 நவம்பர், 2010

srikaruppan12@gmail.com

இவர்கள் ஏன் நமக்கு ஆசான்கள்?

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் ஆஸ்தான குருக்களாக பாரதி,பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகயோர் விளங்குகிறார்கள்.மாகவி
பாரதி ஆங்கில ஏகாதிபத்திய ஆதிக்க காலத்தில் தனது பேனா ஆயுதம் மூலம் வீறுகொண்ட
கவிதைகளை படைத்து மக்கள் மத்தியில் வீராவேசத்தை விதைத்தவன்.சமூக சீர்திருத்த விதைகளையும் விதைத்தவன். உலகளாவிய ஞானம் கொண்டு சோசலிசத்தை சோவியத்தை
அதன் புரட்சியை பாராட்டி மகிழ்ந்தவன்.

ஞாயிறு, 21 நவம்பர், 2010

சமூக மாற்றத்தில் தலித் இலக்கியத்தின் தாக்கம்

பாரதி தனது கதைகளில், நாவல்களில் முத்தாய்ப்பான நாவல் சந்திரிகையின் கதையும்
ஆறில் ஒரு பங்கு கதையும் குறிப்பிடத்தகுந்தவை.இவற்றில் அன்றே ஆன்மசுத்தியோடு
அவர் சிந்தித்து செயல்பட்ட காரியங்களான ஒன்று

படித்ததில் கவரந்தவை

பாரதியின் கதைகளில் 'ஆறில் ஒரு பங்கு' மனதை கவரக்கூடியது.